அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும்  பதிப்புரையும்

அறிவியல் திருவள்ளுவம் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களின் அணிந்துரை காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதிபெற வேண்டுமானால் அஃது உண்மையைப் பேச வேண்டும். வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து நமக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், ஏற்கெனவே உருவாக்கப் பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்தவாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இன நன்மை பெறுகின்றது. அப்படிப் பெருமைபெறு இலக்கியங்களில், திருக்குறள்…

பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2; இலக்குவனார் திருவள்ளுவன்

(பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½ – தொடர்ச்சி) முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2 மக்கள், மன்பதை, குடும்பம், அன்பு,  விருப்பு-வெறுப்பு, நட்பு, வானகம்-வையகம்,  அண்டம், இயற்கை, அரசு, போர், அழுக்காறு, நன்னெறி, அறம், ஒழுக்கம், அரசாண்மை, அறிவு, வாழ்க்கை,  பற்று, காலம், மொழி, பொருளியல்,  அரசியல், உறவு, வலியறிதல், பொறுமை, பணிவு, எளிய தீர்வுகள் எனப் பல பொருண்மைகளில், திருக்குறள் நூலிலும் தாவோ தே சிங்கு நூலிலும் உள்ள ஒப்புமைக் கருத்துகள் பலவற்றையும் எடுத்து…

பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½; இலக்குவனார் திருவள்ளுவன்

முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 1/2 முனைவர் மெய்.சித்திரா அறிவியலிலும் கணிப்பொறிப் பயன்பாட்டிலும் வரலாறு-தொல்லியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன்  தகவல் முறைமைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்; கல்வெட்டியலில் பட்டயம் பெற்றுள்ளார்; இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார்; தொடர்ந்து கல்விப் பட்டங்கள் பெற்று வருகிறார். தமிழ்-கொரிய,  தமிழ்-சுமேரிய,   தமிழ்-சீன  பண்டைய தொடர்புகள், கோவில் குறியீடுகள், கோலங்கள்  பற்றிய ஆய்வாளராகத் திகழ்கிறார். ஆங்காங்கு தமிழ் மலர் ஆசிரியராக 4 ஆண்டுகள்(2014-2018) தொண்டாற்றி யுள்ளார். 2020 முதல் ‘இலக்கியச் சுடர்’ மின்னிதழ்  ஆசிரியர்…

தமிழ் வளர்த்த நகரங்கள் 1. பதிப்புரையும் அணிந்துரையும் அ. க. நவநீத கிருட்டிணன்

தமிழ் வளர்த்த நகரங்கள் நூற்குறிப்பு:தமிழ் வளர்த்த நகரங்கள்ஆசிரியர் : திருக்குறள்மணி, வித்துவான், செஞ்சொற் புலவர் திரு அ. க. நவநீத கிருட்டிணன்தமிழாசிரியர், ம. தி. தா இந்துக்கலாசாலை, திருநெல்வேலிதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,திருநெல்வேலி-6 சென்னை-1.1960அங்கப்ப பிள்ளை கங்காதர நவநீதகிருட்டிணன் (1921-1967) பதிப்புரை ‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்ட’ நந்தமிழ் நாட்டின்சீர் பரவுதற்குரியது. ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே’ என்று நயந்தோன்றப் பாடியுள்ள பாரதியார் உயர்ந்த கருத்தொன்றையும் உள்ளடக்கி வைத்துள்ளார். தாயோடு மொழியும் நாடும் ஒருங்குவைத் தெண்ணப்பட்டு வருதல்…

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. அணிந்துரையும் பதிப்புரையும்

எங்கே போகிறோம்?  1.அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை – முனைவர். த. பெரியாண்டவன் நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக் குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர். ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுற்று நான்காம் ஆண்டு பல்வேறுநாட்களில் விடுதலைநாள் விழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள்,…

‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபாண்டியன்

காலத்தின் குறள் பெரியார் – அணிந்துரை  ‘காலத்தின் குரல்’ என்றுதான் சொல்லக் கேட்டுள்ளோம். நண்பர் வேலரசு (எ) தமிழரசன், தன் நூலுக்குக் ‘காலத்தின் குறள் பெரியார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். நூலைப் படித்துப் பார்த்தபோது, இதனை விடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது என்று தோன்றியது.  மறைந்த தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள், குறள்   வடிவிலேயே, 1330 குறட்பாக்களுக்கும் பொருள் எழுதியிருப்பார். அந்த நூலின் முதல் பக்கத்தில், ”பார்த்தால் குறள், படித்தால் பொருள்” என்று நான் எழுதி வைத்திருந்தேன். அதே போல இந்த நூலும் ‘பார்த்தால்…

சித்தர்கள் கூறும் இரகசியங்கள் -அணிந்துரை

டி.வி.வெங்கட்டராமன், இ.ஆ.ப., (ப.நி.), முன்னாள் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு அரசு. நூலாசிரியர், திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை.      6, (17), முதல்  நிழற்சாலை, இந்திரா நகர், சென்னை – 600 020. தொலைபேசி: 044-24417705 அணிந்துரை           அருமை நண்பர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்களும் அவருடைய மனைவியார் திருமதி. சாந்தா அவர்களும் ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சித்தர் இலக்கியத்திற்கு இந்தத் தம்பதியர் அளித்துள்ள படைப்பு ஒரு பெரும் பரிசாகும் என்று…

திருத்தமிழ்ப்பாவை – மின்னூர் சீனிவாசன் அணிந்துரை

கவிஞர் வேணு. குணசேகரன் இயற்றிய திருத்தமிழ்ப்பாவை  பாசுரப் பாவலரின் வெற்றிப் படைப்பு     தமிழ்த்தாய் விழைந்த வண்ணமும் கட்டளைப் படியும் ‘திருத் தமிழ்ப்பாவை’ உருவாக்கப் பட்டதாய் நூலாசிரியர் கவிஞர் வேணு. குணசேகரன் உரைத்து, நேயர் கரங்களில் அதனைத் தவழவிடுகிறார்.   நாம் பனுவலைப் பயின்றோம், பாசுரங்கள் பொற்புச் சரங்கள், பொற்பூச் சரங்கள் என அமைந்து வியப்பு நல்குகின்றன.   சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நோக்குடன் – பண்பாட்டு நிலை, இலக்கியச் சால்பு, வருங்காலக் கனவும் திட்டமும் ஆகிய திறம் அமையப்…

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : அணிந்துரை: கு.மோகனராசு

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் அணிந்துரை           அன்று திருக்குறள் முனுசாமி அவர்கள், தம் நகைச்சுவைப் பேச்சால் கேட்பவர் மனம் மகிழப் பட்டி தொட்டிகள், நகரங்கள் எனத் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலும் திருக்குறளைப் பரப்பினார். திருக்குறள் எழுச்சியை உருவாக்கினார்.    இன்று இணைய வலைத் தளங்களின் துணையையும் ஏற்றுத் தம் நகைச்சுவைத் திறத்தால், திருக்குறளுக்கு ஏற்றம் தந்து வருபவர் திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள்.      அந்த வரிசையில் வந்ததுதான் திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் என்னும் இந்த நூல்.         இந்த நூலில்…

‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்

‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன்           புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது.                    செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்                    தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ்…

வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு – அ.சிதம்பரநாதன்

வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு   சங்கக்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்கள் வாழ்வில் அமைந்த நல்லியல்புகளையே தம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள். இங்ஙனம், ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ இவையென உள்ளவாறு விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்கக்காலத் தமிழகத்தின் வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநானூறு. -முனைவர் அ.சிதம்பரநாதன்:  ஒளவை சு.துரைசாமியின் புறநானூற்று உரைக்கான அணிந்துரை

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி

(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 தொடர்ச்சி)   3     சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் வரதட்சணைக் கொடுமை, வரதட்சணை கொடுப்பதற்காகவே வேலைக்குப் போகும் பெண்கள் ஆங்காங்கு படுகொலைச் செய்யப்படும் கொடுமை முதலியவற்றைக் கண்டு மனம் கொதிக்கும் இக்கவிஞர் ஆண் என்பதால் கண்ணீர்த் துளிகளுக்கு மாற்றாகக் கவிதைத் துளிகளைச் சிந்தியுள்ளார். அந்தத் துளிகளில், கருவுக்குக் கருவான சமாச்சாரத்தின் கார்காலங்கள் நிசப்தப்பட்டுக் கிடக்கிறது !   பாதம் சுமக்கும் பாதரட்சைகளின் பரதேசி வாழ்வு போல  என்று தீண்டாமை என்று ஒதுக்கப்படும்…