தோழர் தியாகு எழுதுகிறார் 199 : அணையாத் தீ
(தோழர் தியாகு எழுதுகிறார் 198 : தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாமா?-தொடர்ச்சி) அணையாத் தீ! “தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!” என்று பாவேந்தர் பாடியது போலத்தான் அன்றும் அந்தக் குழந்தைகள் பாடசாலைக்குச் சென்றார்கள். ஆனால் தீயில் எரிந்து கரிக்கட்டைகளாக அந்த மழலைச் செல்வங்கள் மீண்டுவரும் என்று அந்தத் தாய் தந்தையர் நினைத்தாரா? உற்றவர் மற்றவர் யாரேனும் நினைத்தாரா? குடந்தை காசிராமன் தெருவில் 2004 சூலை 16ஆம் நாள் கிருட்டிணா ஆங்கில வழி (இங்கிலீசு மீடியம்) பள்ளிக்கூடத்தின் கீற்றுக் கூரையில் தாவிப் பற்றிய…