மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் : 3/6
(மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார், தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 3/6 ஆயினும் 70 பாரியும் ஓரியும் வாழ்ந்த பாரில் உற்றுழி உதவும் நற்றவ வள்ளலார் அற்றோர் அல்லர்; ஆதலின் செல்வாய் அணி புதுக் கோட்டை; அண்ணன் வீடு எங்குள தெனநீ எவரை வினவினும் 75 அன்புடன்…
மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார்
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 2/6 என்றே அலமரும் இளைஞனை நோக்கி “அயரேல் வருந்தேல் அடைவாய் உதவி; தமிழகச் செல்வர் தம்இயல் அறிவேன்; 35 அறம்பல புரிந்து அறவோர்க் களித்துத் தமிழைக் கற்றுத் தமிழ்ப்பணி புரிந்து கல்விக் கூடம் காண்தக அமைத்து நாடும் நலம்பெற நல்லன புரியார்; அழியாப் புகழை அடைய விரும்பார் 40 உரையும் பாட்டும் உடையார் அன்றி மறையிலை போல் மாய்வோர் பலரே; அறுவகைச் சுவையும் அளவில துய்த்து உறும்பல நோய்க்கே உறைவிட மாவார்; உண்ணவும்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 1/6 “இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும் தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய் வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல் வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்” எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே …5 “அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்; பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்; முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில் ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்! …10 கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை; உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்; செல்வரை…
தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூல் – பு.அ.சுப்பிரமணியனார்
தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூல். – அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார் தமிழ்ப் பழங்குடி மக்களாகிய நமக்கு நம் மொழியின் இலக்கியப் பரப்பை உள்ளிய அளவிலேயே பெருமகிழ்ச்சி கொள்வதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அத்தகு பேரிலக்கியங்களின் அடிக்கல்லே தொல்காப்பியமெனும் பழந்தமிழ் இலக்கணமாம். தொல்தமிழ்இலக்கணப்பெட்டகமாம் தொல்காப்பியத்தை எண்ணிப் பெருமையும் சிறப்பும் பெறுகின்ற பெரும் பேற்றினைத் தமிழ் மக்கள் பெற்றிருக்கிறார்கள். இவ்வுலகில் எண்ணற்ற நாடுகள் அவற்றின் மொழிகளைச் செம்மைப்படுத்த முனைந்த காலத்திற்கும் பன்னூறாண்டுகட்கு முன்னரே பைந்தமிழ் மக்கள் எத்தகு கால உச்சியை எய்தியிருந்தார்கள்…
தமிழே இலக்குவனாரின் மூச்சு!
தமிழே இலக்குவனாரின் மூச்சு! “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது. தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர். அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’ _ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன் – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44 தரவு : பாபு கண்ணன்