க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 5/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 தொடர்ச்சி) பெண்ணுக்கு ஒரு சிறு குறையிருந்தாலும் அதைப் பெரிதாக்கி அவளை மூலையில் முடங்க வைத்துவிடுவதும், ஆணுக்கு உடலளவிலும், மனத்தளவிலும் எவ்வளவு பெரிய குறை இருந்தாலும் அதை மூடி மறைத்து அவனுக்கு அழகிய இளமங்கையைத் திருமணம் செய்து கொடுத்து அவளது வாழ்வைப் பாழாக்குவதும். அதற்கு, “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்” என்று விளக்கம் கூறுவதும் நம்மிடையே வேரூன்றியிருக்கும் கொடுமையான மூட மரபல்லவா? இதைத் தீர்க்கவேண்டுமென்று பாவலர் அறைகூவல் விடுகிறார். நாம்தான் திருந்த வேண்டும். மேற்கூறிய…
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி) தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்: எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய். கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால் கால்முளைத்து நடந்திடுமா உன்றன்…
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்: மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு…
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 1/5 தொடர்ச்சி) 2/5 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்: வயல் வேலைக்குச் செல்பவள் முல்லை. காலை விடிவதற்கு முன்பே வேலைக்குச் சென்று விடுகிறாள். இதையும் பாவலர் விட்டுவைக்கவில்லை தன் உவமைத்திறத்தால். பாருங்கள், ‘காய்க்குலையில் பழவண்ணம் வாரா முன்னம் கனிகொறித்துச் சுவைபார்க்கும் அணிலைப் போல’ விடிவதற்கு முன்பேயே வேலைக்கு வந்துவிட்டாள் முல்லை என்கிறார் பாவலர். ஒரு காட்சியில், முல்லையையும் மாறனையும் ஐயப்பட்டுக் காவலர்கள் பிடித்துவிடுகிறார்கள். முல்லைக்கும், மாறனுக்கும் தப்பான உறவிருப்பதாக முடிவுசெய்கிறார்கள். முல்லையோ எவ்வளவோ…
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 1/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
1/5 முனைவர் க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் :உவமைக் குவியல்! உணர்ச்சிப் படையல்! எதையும் எழுதலாம் என்பவன் எழுத்தாளன். இதைத்தான் எழுதவேண்டும் என்பவன் படைப்பாளன். இதில் ஐயா தமிழமல்லன் அவர்கள் இரண்டாவது வகை. சிந்துகின்ற வியர்வைத் துளியும், செதுக்குகின்ற மைத்துளியும் செந்தமிழர் வாழ்வுக்கே என்னும் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஐயா அவர்கள். உழலும்போது மட்டுமல்ல, உறங்கும்போதும் தமிழர் நலனையே கனவு காண்பவர் அவர். காட்சிக்காகவோ, பேச்சுக்காகவோ, மேல்பூச்சாக தொண்டாற்றுபவர். அல்லர். தன்னுடைய உடல், பொருள், உயிர் மட்டுமல்ல, குடும்பத்தினரையும் தமிழுக்காய்த் தாரைவார்த்திருப்பவர். அவரின்…