அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்

  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.   அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. நன்றி முனைவர் சா.இராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]

கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மலாயாப் பல்கலைக்கழகம் கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்   பதிவு இறுதி  நாள் : ஆடி 15, 2045 /  சூலை 31,  2015 படைப்பு அனுப்ப இறுதி  நாள்  : தை 17, 2047 / சனவரி 31, 2016 கருத்தரங்கம் தி.பி.2047 / கி.பி. 2016  

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

  மையக்கருத்துரை   கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014 இதழின் தொடர்ச்சி 4.1.1.முதலும் கருவும்               ‘ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து                அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை                இறையுற வாங்கிய நெறியயல் மராஅத்து               பிள்ளை உள்வாய்ச் செரீஅய               இரைகொண்ட மையின் விரையுமாற் செலவே’ ( குறுந். 92). இங்கு முதலும் ( முதலடி) கருவும் ( ஏனைய அடிகள்) மட்டுமே அமைந்துள்ளன. புலவர் தாமோதரனார். காமமிக்கக் கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என்பது பிற்குறிப்பு….

பன்னாட்டுக் கருத்தரங்கு

    அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பன்னாட்டுக் கருத்தரங்கு-தமிழறிஞர்கள்-எழுத்தாளர்கள் குறித்த பொருண்மையில் நூலாக்கப்பணி-ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று நூல்கள் எழுத அரிய வாய்ப்பு. பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.  தமிழ்ப்பணியின் தொடர்பணியில் தங்களையும் இணைத்துக் கொள்க. அழைப்பும் விவரங்களும் காண்க:   அறிவிப்பு மடல்   மேலும் தகவல்களுக்கு : முனைவர் அரங்க.பாரி(ஒருங்கிணைப்பாளர், 9842281957) முனைவர் ப.சு,மூவேந்தன்,(இணை ஒருங்கிணைப்பாளர்,) முனைவர் சா.இராசா (இணை ஒருங்கிணைப்பாளர் 9976996911,8680901109)    

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது – தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  திருமலை   அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள்’ என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் திச.23,24 ஆகிய இருநாளிலும் நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டார். தில்லி சவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா.அறவேந்தன் நூல்களைப் பெற்றுக்கொண்டு முதன்மையுரையாற்றினார்.   விழாவில் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை …