இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19 தொடர்ச்சி) இக்கவிதையின் பயன் எளியோர்க்கு உதவ வேண்டும், ஏழைக்குக் கல்வி அறிவிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வை அகற்ற வேண்டும். பொய்மையை மாய்க்க வேண்டும். உண்மையை நிலைநிறுத்த வேண்டும். உயர்கணம் கொள்ளல் வேண்டும். ஏழ்மைக்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். இனிய சொல் பேச வேண்டும். இன்னாச் சொல் எள்ளல் வேண்டும். புகழ்மிகு செயல்கள் புரிதல் வேண்டும். புவியில் அனைவரும் போற்ற வாழ வேண்டும். நன்றே செய்தல் வேண்டும். அதுவும் இன்றே செய்தல் வேண்டும் எனும் கொள்கைகளே…