மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! – தாலின்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! தாலின் அறிக்கை “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…
அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா
அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும் அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை துய்த்தவர்கள்(அனுபவப்பட்டுவிட்டவர்கள்), வெகு எளிதில் அதனைக் கைவிடத்துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் (சிரஞ்சீவியாக) நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர். அதிகாரம் தரும் மயக்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள், கூட்டுத் தோழர்கள் நண்பர்கள் இடத்தும் கூட பகைமை கண்டு மிரள்வர். இந்நிலையில் ஒரு சிறு எதிர்ப்பு-தன் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல்-போக்கை மாற்றிக்கொள்வது முறை எனும்…