வருமானவரித்துறையினரைக் கைது செய்க!   வருமானவரித்துறை என்பது ஒரு தண்டத்துறை. அரசிடமிருந்து மாத வருவாய் பெறுபவர்களிடமிருந்து மட்டும் வரிக்கொள்ளை யடிக்கிறதே தவிர உண்மையில் வருமானவரி கட்டாமல் கொள்ளையடிப்போரிடம் மண்டியிடும். இயல்பான சீரான வரி விதிப்பு முறை இருப்பின் வரி ஏய்ப்பு என்பதற்கு வாய்ப்பிருக்காது. தவறான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தி அதற்கென ஒரு துறையைச் செயல்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்?   இத்துறையை மூடிவிட்டு, அவர்களாகவே வருமானவரி செலுத்தும் எளிய முறையை நடைமுறைப்படுத்தினால், கூடுதல் வரி வருவாயும் கிடைக்கும். வருமானவரித்துறை ஊழியர்களுக்கான சம்பளம்,…