கருப்பினப் போராளி அலி! -ஆரூர் தமிழ்நாடன்
முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி. அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன் நேயர்களிடமிருந்து நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற அமைதியில் அமிழ்ந்துவிட்டன. அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…