தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் – தொடர்ச்சி) அனல் கீழ் பனித் திரள் காலநிலை மாற்றம் தொடர்பான தரப்புகளின் மாநாடு –27 (கொப்27) எகித்தில் நடந்து முடிந்துள்ளது. கொப்27 (COP27) மாநாட்டில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தரசு ஆற்றிய உரையை — நரகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையை — சென்ற மடலில் மேற்கோளாகக் கொடுத்திருந்தேன். மாநாட்டின் உருப்படியான விளைவு என்பது காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வின் வளர்ச்சிதான். காலநிலை மாற்றம் என்பது கற்பிதமன்று, அறிவியல் புனைகதையன்று. அஃது அறிவியல் அடிப்படையிலானது. அறிவியலின் துணைகொண்டுதான் அதை வெல்லவும் கூடும். இந்த அறிவியல் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது இம்மாநாட்டில் வெள்ளிடை மலையாக ஒளிர்ந்தது. இஃது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை: ஏடேறிய வரலாற்றில் கடந்த ஏழாண்டுக் காலம் போல் ஒரு வெப்பக் காலம் கண்டதே இல்லை….