அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்
அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …