திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கமும் அ.இ.த.பே.செயற்குழுக்கூட்டமும் – ஒளிப்படங்கள்
கடந்த திங்கள் திருவனந்தபுரத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவையின் செயற்குழுக் கூட்டம் திருமுத்துச்செல்வன் தலைமையில் புலவர் த.சுந்தரராசன், திரு முத்துராமன் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் காப்பிக்காட்டு ஊரில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைப்பகுதியல் சிலையரங்கம் அல்லது கோபுரம் எழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000
தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000 கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன. எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் எனப் பல்வேறு கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன….
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு
ஆனி 26,2047/ சூலை 10, 2016 காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை குமரி மாவட்டம் பனம்பாரனார் நிலம்தரு திருவில் பாண்டியன் அதங்கோட்டாசான் ஆகியோர் திருவுருவப்படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவை
தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்
சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொல்காப்பியர் ஆய்வு மையம் அறக்கட்டளை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகள் தமிழாலயம், சாமித்தோப்பு, குமரிமாவட்டம் தலைமை: கு.பச்சைமால் முன்தொகை அளிப்பவர் : வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கவுரை: புலவர் த.சுந்தரராசன் சிறப்புரை: பேராசிரியர் ஆறு அழகப்பன் பேராசிரியர் பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன்