அகரமெய் அறிவாய்! – மு.பொன்னவைக்கோ
அகரமெய் அறிவாய்! க ங ச ஞ சொல்லட்டுமா? கல்விக் கற்கச் செல்லட்டுமா? ட ண த ந சொல்லட்டுமா? தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா? ப ம ய ர சொல்லட்டுமா? பண்பைப் பெற்று வெல்லட்டுமா? ல வ ழ ள சொல்லட்டுமா? வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா? ற ன ற ன சொல்லட்டுமா? மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா? முனைவர் மு.பொன்னவைக்கோ
அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா
அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார். கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன்…