தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 13/17 பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானைபெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானைஎனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை (61) சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானைகூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீநேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானைசங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை (62) காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானைதாய்கட்கு வீரம்…