இரம்சான் நோன்பை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி – வைகை அனிசு
தேவதானப்பட்டியில் முசுலிம்சமாஅத்து இளைஞர்கள் விளையாட்டுக்குழுவும் இந்திய நன்மதிப்பு முன்னணியும்(பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா) ஆண்டுதோறும் இரம்சான் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி நடத்தி வருகின்றன. தேவதானப்பட்டியில் உள்ள திப்பு சுல்தான் திடலில் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் கம்பு விளையாட்டு, சடுகுடு போட்டி, இசைநாற்காலி, ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி முதலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்குப் பள்ளிவாசல் சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கினார். இவ்விளையாட்டுப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ,…