முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம் பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள்…