இந்திச் செயற்பாடு: அமித்து சா விற்குப் பாராட்டு!- இலக்குவனார் திருவள்ளுவன்
இந்திச் செயற்பாடு: அமித்து சா விற்குப் பாராட்டு! பல தேசிய மொழி இன மக்கள் வாழும் இந்தியாவில் பெரும்பான்மை இன மக்களின் தாய்மொழிகளுக்கு எதிராக நாளும் செயற்படுவதே இந்திய அரசின் செயற்பாடு. அண்மையில் சட்டப் பெயர்களை இந்தியில் மாற்றிய கொடுமைகூட அரங்கேறியது. இந்தியைப் பயன்படுத்துவோருக்கு இந்தியில் சட்டப் பெயர்கள் குறிக்கப்பெற்றுப் பயன்படுத்தி வந்துள்ளன. அவ்வாறிருக்க அனைத்து மொழியினருமே சட்டங்களின் பெயர்களை இந்தியில் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் அண்மையில் மூன்று சட்டங்களை இந்திமயச் சமற்கிருத்தில்…