துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு   இரத்தத்தான முகாம் புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை  அட்டோபர் 12, 2018 காலை  10.00 முதல் 2.00  வரை திறன் மண்டல(talent zone)நிறுவனம்,  என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம் துபாய் அல் நக்தா பகுதி இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.  தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95  

அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்

அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்   அய்மானில்  இரமதாஉறைவகம்(கருஞ்சதுக்கம் / Black Square) பின்புறம் அமைந்துள்ள அரேபியா வாடகை  ஊர்தி அலுவலகத்தில் பங்குனி 28, 2048 / 10.04.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை  இரத்தத்தான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த  இரத்தத்தான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை  இதாயத்து: 050 51 96 433 கீழை ஏ  அமீது யாசின்: 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரத்தத்தான…

அபுதாபி மௌலிது குழு நடாத்தும் மீலாது பேச்சுப் போட்டி, அமீரகம்

அபுதாபி மௌலிது குழு நடாத்தும் மீலாது பேச்சுப் போட்டி அபுதாபி : அபுதாபி மௌலிது  குழு நடாத்தும் அமீரகம் தழுவிய மீலாது பேச்சுப் போட்டி  கார்த்திகை 10, 2047 / 25.11.2016 அன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (சல்) என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது. போட்டியாளர்கள் 5 நிமிடங்கள் மட்டுமே பேச  இசைவளிக்கப்படுவர். வயது வரம்பு இல்லை.  பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோர்க்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும். பெயர் பதிவுக்குத் தொடர்பு எண் :…

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான  சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)   துபாயில் செயல்பட்டு வரும்  தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம்  கட்டணமாகப் பெறப்படுகிறது.   பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி. அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும்  தூதஞ்சல் பணி இருந்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார்  தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய…

‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு:       உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046  / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும்…

அமீரகத்தில் கோடை விழாக்கள்

 அமீரகத்தில் கோடை விழாக்கள்    அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து  

கவியரசு கண்ணதாசன் விழா – சென்னை(வாணி மஃகால் – தியாகராயநகர்)

  ஆனி 06, 2046 சூன் 21, 2015 ஞாயிறு மாலை 6.00 கடந்த கால் நூற்றாண்டாக – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) கவியரசர் புகழ் பாடி வருகிறது.   இவ்வாண்டும் அழைப்பிதழில் உள்ளவாறு விழா நடைபெற உள்ளது. கவியன்பர்களும் திரையிசை அன்பர்களும் நண்பர்களுடன் வருமாறு வேண்டுகின்றோம். கவிஞர் காவிரிமைந்தன்  நிறுவனர் – பொதுச்செயலாளர்  கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்  பம்மல்,  சென்னை 600 075 தற்போது – அபுதாபி – அமீரகம்  00971 50 2519693 00971 50 4497052 kaviri2015@gmail.com  www.thamizhnadhi.com 

திருக்குறளே தேசியநூல் – தமிழ்ச்சேய் தஞ்சாவூரான்

  குறள்… அன்பின், அறம்பாடியது   மறம்பாடியது ஆனால், எந்தமதத்தைப்பற்றியும் புறம்பாடவில்லை! ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… வாழ, பொருள்செய்யும்வழிதந்தது வாழ்க்கை, பொருள்படநெறிதந்தது ஒருக்காலும் வாழ்வில், மருள்படரவரிதந்ததில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… காதலின், இன்பம் சொன்னது காத்திருக்கும், துன்பம்சொன்னது கிஞ்சித்தும் காமம்தூண்டி, வன்மம்சொன்னதில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! தஞ்சாவூரான் துபை. ஐக்கிய அரபு அமீரகம் +971 55 79 88 477