பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 1
(‘புதியபுரட்சிக்கவி’: முன்னுரை – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி – களம் : 1 காட்சி : 1 களம் : 1 காட்சி : 1 அரசன் இருக்க – அமைச்சர் வருகிறார் அகவல் அமைச்சர் : ஆல்போல் வளர்க அரசர் கொற்றம் கடிதில் அழைத்த காரணம் யாதோ? அரசன் : வருக அமைச்சரே அமர்க ஈங்கே * அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண் தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள் ஆர்ந்த ஒழுக்கநூல் நீதிநூல்…