உலகளாவிய தமிழ்க்கல்வி – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (புரட்டாசி 26, 2045 / 12 அட்டோபர் 2014 தொடர்ச்சி)   பாடத்திட்டங்கள் பாடத்திட்டங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறையில் அமைக்க விரும்புவதே இயற்கை. என்றாலும் கலந்து பேசி சீரான முறையைக் கடைப்பிடிப்பது நன்று. பாடத்திட்டங்கள் மாறினாலும் அவற்றின் அடிப்படை நோக்கத்தில் மாறுபாடு கூடாது.எனவே, பின்வருவனவற்றில் கருத்து செலுத்த வேண்டும்.   தமிழ் நெடுங்கணக்கில் – எழுத்துகளில் – கிரந்த எழுத்துகளைச் சேர்க்கக்கூடாது.   கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாத – அயற் சொற்களைக் கலக்காத தலைமுறையை உருவாக்க இஃது உதவும். குறிப்பிட்ட நிலைக்குப்பின்னர் கிரந்த எழுத்துகளைப்…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 5 : ச.பாலமுருகன்

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல். கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து…

தமிழ்க் கனடியருக்காக அமெரிக்கக் கருத்தரங்கு

கனடியத் தமிழர் பேரவை ஏற்பாட்டில் தமிழ்க் கனடியருக்காக அமெரிக்கா நடத்திய கருத்தரங்கு: அமெரிக்காவில் கல்வி கற்றல், வணிகம், முதலீடு செய்தல், பயணம் – வேலைக்கான  புகுவுச்சீட்டு பெறுதல் தொடர்பாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் கனடியத் தமிழருக்காய் கருத்தரங்கொன்றை (ஆனி 2045 / சூன் 2014) நடத்தியது. கனடியத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாகக் கனடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய கருத்தரங்கு மிகவும் பயனுள்ள பல தகவல்களை பங்கேற்றோருக்கு வழங்கியது. மண்டபம் நிறைந்த பங்கேற்பாளரோடு ‘மார்க்கம் கொண்வென்சன்  நடுவத்தில்’ இடம்பெற்ற கருத்தரங்கில் அரசியல் – பொருளாதாரம்,…