கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’
கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ ‘குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவை’ கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை மிகச் சிறப்பாக அறிஞர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. அறிஞர்கள் பலரும், அனைத்துக் குவைத்து தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிருவாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின்” பேரன்பில் இணைந்து சிறப்பாக இவ்விழாவை ” குவைத்தின் மிர்காப்பு நகரில் கொண்டாடியது. தாய்த்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தனது திருக்கரங்களால் வருடந்தோறும் …