தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 5/17 காடுதனில் வாழ்விலங்கும் கல்லும் உருகுவண்ணம்பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டால் அம்மானைபாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டாம் என்றிடினேபீடுற்ற தமிழிசையின் பெயர்களெங்கே அம்மானைகள்வர் பெயர்மாற்றிக் களவுசெய்தார் அம்மானை (21) செந்தமிழ்த் தெய்வத்தைச் சிறந்தநம் முன்னோர்கள்பைந்தமிழ்ப் பண்களால் பாடினர்காண் அம்மானைபைந்தமிழ்ப் பண்களால் பாடினரே யாமாகில்இன்தமிழில் இசையில்லை என்பதேன் அம்மானைஎன்பவர் ஆராய்ச்சி யிலாதவரே யம்மானை (22) ஒருகால் உரைத்தாலும் உவப்பளிக்கும் தமிழிசைகேட்(டு)உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 3/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 4/17 முத்தமிழ் குயில்மயில்போல் இன்பம் கொடுக்குமொரு மொழியென்றால்இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டும் அம்மானைஇயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டு மாயிடினேபயில்தமிழ்அம் முச்சிறப்பும் படைத்துளதோ அம்மானைசிலப்பதிகா ரத்தில்முச் சிறப்புமுள தம்மானை (16) இயற்றமிழ் புதுக்கியதேன் சுவைசொட்டும் புகழ்ச்சிமிக்க தமிழதனில்மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள அம்மானைமதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள வானாலும்ஓதுக்கலுறும் குப்பைகளும் உள்ளனவால் அம்மானைஉள்ளகுப்பை ஆரியத்தின் உதித்தனவாய் அம்மானை (17) இடமார்ந்த தமிழ்நாட்டில் இலங்கு தமிழாம்தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார்: 3/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 3/17 தேனுலவு தருவின்கீழ்த் தேவருள தாக்கூறும்வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்கா தம்மானைவானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்காதெனின் அந்தவானுலகை உயர்ந்ததா வாழ்த்துவதேன் அம்மானைவாழ்த்துபவர் தமிழ்ச்சுவையின் வளமறியார் அம்மானை (11) இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில்பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானைபிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோபிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானைபிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை (12) அமிழ்தான நீர்சூழ்ந்த அகல்நிலத்து நாடுகட்குள்தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் அம்மானைதமிழ்நாடென் றாலேயோர்…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி 1/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 2/17 கற்றார் களிப்பெய்தக் கவின்சிறந்த நயமீந்துவற்றா வளமுடைத்து வண்தமிழ்காண் அம்மானைவற்றா வளமுடைத்து வண்தமிழே யாமாகில்பற்றார் பலகுறைகள் பகருவதேன் அம்மானைபகரல் கடல்முதலாம் பகைவரினால் அம்மானை (6) பழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்ததுபோல்மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானைமொழிகளிலே இனியதுநம் முத்தமிழே என்பதற்குவழியுடன்ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய் அம்மானைதமிழ்என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை (7) அயல்மொழியில் இல்லாத அரியதொரு ழம்முதலாம்இயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டம்மானைஇயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டாமாயின்முயல்வுறுஆ ரியஎழுத்தை மொழிவதெங்ஙன் அம்மானைஇயலினிய…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 1/17
அம்மானை மூன்று பெண்மணிகள் கூடி ஒருவகையான காய்களை மேலேபோட்டுப் பிடித்துக்கொண்டும், தொடை தடை விடைகளுடன் ஒருவர்க்கொருவர் உரையாடிக்கொள்ளும் முறையில் இன்னிசையுடன் பாடிக்கொண்டும் விளையாடுகின்ற ஒரு வகையான ஆட்டத்திற்கு அம்மானை என்று பெயர். இந்நிலையை அமைத்துப் பாடுகின்ற பாட்டிற்கு அம்மானைப் பாட்டு என்று பெயர். இப்பாட்டு (பெரும்பான்மையும்) ஐந்து அடிகளை உடையதாய் ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவால் பாடப்பெறும். தொடை : ஒரு பெண் ஒரு செய்தியை (தொடுத்து) அறிவிப்பதாக முதல் இரண்டடிகளும் இருக்கும். தடை : முதற்பெண் அறிவித்ததற்கு, இரண்டாவது பெண் (தடுத்து) குறுக்குக் கேள்வி…