கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் தமிழ்நூல் வெளியீடு – விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த ஆகட்டு 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா சென்னை இ.கி.அ.(ஒய்எம்சிஏ) திடலில் நடைபெற்றது. புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று( ஆவணி 11, 2049 -27.08.2018 அன்று) , 2017-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன. இவற்றுள் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘எங்கிருந்து தொடங்குவது’…
கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!
கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்! வந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அறிஞர் இராதாகிருட்டிணன் விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிய ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. …
கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஆவணி 09, 2047 / செட்டம்பர் 25) தேனியில் நடைபெற்றது;…
குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று எழுதுக! – கவிஞர் முருகேசு
குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் முருகேசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார். இவ்விழாவிற்கு இராமலிங்கம்& குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். தேசூர் மு.சீவா அனைவரையும் வரவேற்றார். வந்தவாசி கிளை நூலகர் கு.இரா.பழனி,…
படைப்பிலக்கியங்களால் மட்டுமே முடியும்!
படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின் மன உலகை மாற்றிட முடியும்! குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார். இவ்விழாவிற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.சீவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘படித்துப் பழகு‘…