‘தமிழே’ என்பதை, “தமிழாவது வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும், இயலிசை நாடகங்களும் என்று சொல்லப்படா நின்ற மூன்று தமிழர்களும்’ என்று விளக்குகிறார். அரும்பதவுரைகாரர். தமிழ்பாடல்களில் ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ என்ற வடமொழி ஒலிகள் வரலாகாது என்ற நெறி இசையுலகிலும் அன்று கடைப்பிடிக்கப்பட்டது என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவே ‘ஸம்போ மஹாதேவா’, ‘நாயகர் பக்ஷமடி’, ‘ஜங்கார ஸ்ருதி செய்குவாய்’ என்றெல்லாம் இன்று பாடுவது தமிழிசையிலக்கணத்துக்கு மாறானது என்பது புலனாகிறது. – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்: தமிழன் படைத்த கலைக்கருவூலம்: பக்கம். 23