ஐரோப்பிய பண்டுவ மருத்துவக் கழகத்தின் விருது பெறும் முதல் ஆசியர் – தமிழர் மரு. வீரப்பன்
விருதாளர் மரு.சி.வீரப்பனைப் பாராட்டிய பொறி.இ.திருவேலன் அறிமுக உரை! தலைமை விருந்தினர் மாண்பமை நீதிபதி இராசேசுவரன் அவர்களே! சுழற்கழக மாவட்டம் 3230-இன் மேனாள் ஆளுநரும், இந்நாள் உறுப்பினர் சேர்க்கைக் குழுவின் அறிவுரைஞருமான, சிறப்பு விருந்தினர், சுழலர்(ரோட்டேரியன்) ஏ.பி. கண்ணா அவர்களே! இவ்விழாவை நடத்தும் தலைவர் திரு கணேசன், செயலாளர் திரு வெங்கடேசன், திரு இராமநாதன், திரு இளங்கோ, பிற பொறுப்பாளர்களே!! எனது கெழுதகை நண்பரான, மருத்துவத்துறையில் சீர்மையாளர் (Vocational Excellence Award) என விருது பெறவிருக்கும் தகைமையாளர் மருத்துவமணி சிதம்பரம் வீரப்பன் அவர்களே! அவர்கள்தம்…
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடை விழா 2014
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 2014 ஆம் ஆண்டுக்கான கோடைவிழா மிகச் சிறப்பாக கடந்த 07-07-2014 அன்று நடைபெற்று முடிந்தது. அந்நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்புகள் இங்கே! ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காண்க!
மெய்வல்லுநர் போட்டி 2014
மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும்…