ஒளவையார்:2 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 11 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய்…