ஏழு தமிழர் விடுதலை :உச்சநீதிமன்றத்திற்கு உசாவலதிகாரம் இல்லை – நீதிபதி சந்துரு
ஏழு தமிழர் விடுதலைக்கு எதிரான விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் உசாவச் (விசாரிக்க) சட்டத்தில் இடமில்லை! – நீதியரசர் சந்துரு நெற்றியடி! இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை விவகாரம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில்! இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்துக் கேட்டு நடுவண் உள்துறைச் செயலருக்குத் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மடல் எழுதியிருக்கிறார். கவலைக்கிடமாகக் கிடக்கும் தந்தையைக் கடைசி முறை பார்க்கக் கூட நளினிக்கு ஒப்புதல் மறுத்த செயலலிதா அரசு, அது நடந்த அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் ஏழு…