தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்
தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர். இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார். பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…
ஏழ்தெங்கம் ஈழம் ஆனது! – அரசன் சண்முகனார்
ஏழ்தெங்கம் ஈழம் ஆனது! குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்கம், ஏழ்மதுரை, ஏழ்முன்பாலை, ஏழ்பின்பாலை, ஏழ்குன்றம், ஏழ்குணக்காரை, ஏழ்குறும்பனை என்று 49 நாடுகள் இருந்ததாக இறையனார் உரையிலிருந்து அறிகிறோம். “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என இதைச் சிலப்பதிகாரமும் செப்புகிறது. இதில் குறிப்பிடப்படும் ஏழ்தெங்க நாட்டின் எஞ்சிய பகுதி கடல்கோளினின்றும் தப்பித்து இன்று தீவாக இருக்கும் பகுதியே இலங்கை அல்லது ஈழம் ஆகும் .‘ஏழ் தெங்கம்’ என்பதே ஈழம் எனவும் இலங்கை எனவும் மருளி வழங்குகின்றது. -அரசன் சண்முகனார்: தமிழ் நிலவரலாறு