மார்ச்சு மாத இற்றைத் திங்கள் நிகழ்வு, அகநாழிகை
வணக்கம் நண்பர்களே, புது தில்லியி்ல் ஆம் ஆத்மியும் திருவரங்கத்தில் அஇஅதிமுகவும் பெற்ற வெற்றிகள் இரு வேறு பட்டறிவுகளையும் படிப்பினைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன. போராட்ட அரசியல் செயல்பாட்டாளர்களில் பலர் அடுத்த கட்டமாகத் தேர்தலில் நின்று மக்கள் பகைவர்களைத் தோற்கடிப்பது குறித்தும், தேர்தல் முறையைத் தமது இறுதி இலக்குக்காகப் பயன்படுத்துவது குறித்தும் முன்பு எப்போதையும்விட அதிகமாக சிந்திக்கும் காலம் இது. அதே சமயம் இந்த தேர்தல் முறையில் அணுவளவேனும் நாம் சாதித்துவிடமுடியாது, எனவே இது போராட்ட அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று மாற்றுக் கருத்துகள் நிலவும் காலமும்கூட. பெருவாரியான…