வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.

வவுனியாவில் தை 10, 2048  திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு  முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைக் குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு, அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை ( தை 07, 2048 / வெள்ளிக்கிழமை 20.01.2017 ) அனுப்பி வைத்துள்ளனர்.   வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் …

யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!

யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!   யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதால் பெரும்  இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகத் தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.   மேலும், மன ஆற்றுப்படுத்தலுக்கான வசதிகள் எதுவும் யாழ் சிறையில் வழங்கப்படாததால் தாம் மன  நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலை 7 மாதங்களுக்கு முன்னர் நவீன மயப்படுத்தப்பட்டது.  ஆனாலும் இங்குக் கைதிகளின் மன ஆற்றுப்படுத்தலுக்கான தொலைக்காட்சி  முதலான…

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – நேரடி அறிக்கை!

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? –  நேரடி அறிக்கை!   அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியபோதும்…   ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தபோதும்…   தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணஅவை உறுப்பினர்களும் குதிகால் பிடரியில் அடிபட கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கும், அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் ஓடோடிச் சென்றார்கள். ஓட்டம் என்றால் அப்படியோர் ஓட்டம்! இவர்கள்…