அரசுப்பணிக்குத் தமிழ்ப்புலவர்கள்
தமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ப்புலமைப் பட்டம் பெற்றோர்க்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை தமிழ்ப் புலமையுற்றோர் பணிதேடிச் செல்லுங்கால் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தம், அதனுடன் தமிழ்ப்புலமை பெற்றிருப்பதால் அதற்காக இகழப்படுகின்றனராம். என்னே…