இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா? – இலக்குவனார்திருவள்ளுவன்
இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா? நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல் போய்விடும். எனவேதான், அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (திருக்குறள் – 555) என்றார் தெய்வப்புலர் திருவள்ளுவர். மக்களுக்குக் கிடைக்கவேண்டியவை கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமை அல்லது காலம் கடந்தும் கிடைக்காமை,…