திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி) 02. பொருள் பால் 08. அரண் இயல் அதிகாரம் 075. அரண் நாட்டிற்குத் தேவையான இயற்கை, செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள். ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம் போற்று பவர்க்கும் அரண். போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும் கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் காடும், உடைய(து) அரண். ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள் காடுகள் கொண்டது அரண். உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின் அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல். …