திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து  நோய்கள் வரும்முன் காக்கும்,   வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்      வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று,        நிறையினும், குறையினும் நோயே.   ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து),      அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு        முழுதும் செரித்தபின் உண்டால்.   அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு      பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….

திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை.     உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்    கள்காதல் கொண்(டு)ஒழுகு வார்.       கள்ளைக் காதலிப்பார் எப்போதும்        அஞ்சப்படார்; புகழையும் இழப்பார்.   உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால்      எண்ணப் படவேண்டா தார்.      கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம்          மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க.     ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…

திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர்.   பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார்,      இன்சொல் இழுக்குத் தரும்.      அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும்        பரத்தையின் இன்சொல் இழிவுதரும்.       பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர்,      நயன்தூக்கி, நள்ளா விடல்.      பெறுபயன் ஆய்ந்து பண்போடு        பேசும், பரத்தையரை நெருங்காதே.        பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…

திருக்குறள் அறுசொல் உரை – 091. பெண்வழிச் சேறல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் மிகுகாமத்தால் அடிமையாகி, மனைவியின் மொழிவழிச் சென்று அறம்மறத்தல். மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்,      வேண்டாப் பொருளும் அது.       பெண்வழி நடப்பார், பயன்அடையார்;        நல்செயல் வல்லார், விரும்பார்.   பேணாது பெண்விழைவான் ஆக்கம், பெரியதோர்      நாணாக நாணுத் தரும்.   மனைவிக்கு அடிமை ஆகியார்        வளநலம், வெட்கப்படத் தக்கவை.   இல்லாள்கண் தாழ்ந்த இயல்(பு),இன்மை; எஞ்ஞான்றும்,     …

திருக்குறள் அறுசொல் உரை – 090. பெரியாரைப் பிழையாமை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 089. உள்பகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை பெரியார்சொல் கேட்பார், பிழைசெய்யார்  பெரியார்சொல் கேளார், பிழைசெய்வார்.   ஆற்றுவார் ஆற்றல், இகழாமை; போற்றுவார்          போற்றலுள் எல்லாம் தலை.      செயல்வல்ல பெரியாரை இகழாது,        மதித்துச் செயல்படல் சிறப்பு.   பெரியாரைப் பேணா(து) ஒழுகின், பெரியாரால்      பேரா இடும்பை தரும்.      பெரியார்தம் சொல்வழி நடவாமை,        பெயராப் பெரும்துன்பம் தரும்.   கெடல்வேண்டின், கேளாது செய்க; அடல்வேண்டின்,     …

திருக்குறள் அறுசொல் உரை – 089. உள்பகை: வெ. அரங்கராசன்

அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் தொடர்ச்சி 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 089. உள்பகை      வெளியில் தெரியாமல், மனத்துள்ளே ஒளிந்துஇருந்து, அழிக்கும் கொடும்பகை நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும்,      இன்னாஆம் இன்னா செயின்.      நோய்தரும் நிழல்நீரும், தீமைதான்;        நோய்தரும் உறவும், தீமைதான்.   வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக,      கேள்போல் பகைவர் தொடர்பு.       வெளிப்பகைக்கு அஞ்சாதே; உறவுபோல்        நடிக்கும் உள்பகைக்கு அஞ்சு.   உள்பகை அஞ்சித் தன்காக்க, உலை(வு)இடத்து,…

திருக்குறள் அறுசொல் உரை – 088. பகைத் திறம் தெரிதல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 087. பகை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் பகைவரது பலவகைத் திறன்களை ஆராய்ந்து தக்கவாறு நடத்தல்.     பகைஎன்னும் பண்(பு)இல் அதனை, ஒருவன்      நகையேயும், வேண்டல்பாற்(று) அன்று.      பகைஆக்கும் பண்புஇல்லா எதுவும்,        வேடிக்கை என்றாலும் வேண்டாம்.   வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க,      சொல்ஏர் உழவர் பகை.      வீரரைப் பகைத்தாலும், சொல்திறப்      பேரறிஞரைப் பகைக்க வேண்டாம்.   ஏமுற் றவரினும் ஏழை, தனியனாய்ப்,…

திருக்குறள் அறுசொல் உரை – 087. பகை மாட்சி : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 086. இகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 087. பகை மாட்சி படைஅறிவு, வலிமை, நல்துணை பொறுமை போன்றன பகைச்சிறப்புகள். வலியார்க்கு மா(று)ஏற்றல் ஓம்புக; ஓம்பா      மெலியார்மேல் மேக பகை.      வலியார் பகையை, விலக்குக;        மெலியார் பகையை, விரும்புக.   அன்(பு)இலன், ஆன்ற துணைஇலன், தான்துவ்வான்,      என்பரியும் ஏ(து)இலான் துப்பு….?      அன்பு,துணை, வலிமை இல்லான்,        பகைவரை எப்படி எதிர்கொள்வான்….?   அஞ்சும், அறியான், அமை(வு)இலன், ஈகலான்,      தஞ்சம்…

திருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 084. பேதைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை    பேர்அறிஞர் என்று காட்டுதற்குக் கீழ்அறிவைக் கைஆளும் அறியாமை அறி(வு)இன்மை, இன்மையுள் இன்மை; பிறி(து)இன்மை,      இன்மைஆ வையா(து) உலகு.    அறிவு இல்லாமையே, வறுமை;        பிறஎலாம், வறுமைகள் அல்ல.   அறி(வு)இலான் நெஞ்(சு)உவந்(து) ஈதல், பிறிதுயாதும்    இல்லை, பெறுவான் தவம்.        அறியான் மனம்மகிழ்ந்து தருதல்,        பெறுவான் செய்த தவத்தால்தான்.   அறி(வு)இலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை,   …

திருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 083. கூடா நட்பு  கூடாத மனங்களின் கூடாத போலிமை நட்போடு கூடாமை. சீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை,    நேரா நிரந்தவர் நட்பு.          மனம்கூடா நண்பர், வாய்ப்புவரின்,      துயரம் செய்வார்க்கும் துணைஆவார்.     இனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர்    மனம்போன்று, வேறு படும்          போலிமை நண்பர்தம் நட்பும்,          விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.   பலநல்ல கற்றக்…

திருக்குறள் அறுசொல் உரை – 084. பேதைமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 083. கூடா நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 084. பேதைமை அறிய வேண்டுவன அறியாமையும்,    அறிய வேண்டாதன அறிதலும். பேதைமை என்ப(து)ஒன்று யா(து)…?எனின், ஏதம்கொண்டு,    ஊதியம் போக விடல்.         தீமையைப் பிடித்துக் கொண்டு,          நன்மையைப் போகவிடும் அறியாமை.   பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை      கைஅல்ல தன்கண் செயல்.         ஒழுக்கம் அல்லாத செய்கை,        அறியாமையுள் பெரிய அறியாமை.   நாணாமை, நாடாமை, நார்இன்மை,…

திருக்குறள் அறுசொல் உரை – 082. தீ நட்பு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 081. பழைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல்  அதிகாரம் 082. தீ நட்பு  தீப்போன்று, கொடிய பேர்அழிவுதரு தீமையான நட்போடு சேராமை.   பருகுவார் போலினும், பண்(பு)இலார் கேண்மை      பெருகலின், குன்றல் இனிது.            பண்புஇலார் போலித் தீநட்பு        நிறைதலினும், குறைதல் இனிது.     உறின்நட்(டு), அறின்ஒரூஉம், ஒப்(பு)இலார் கேண்மை,    பெறினும், இழப்பினும் என்?          பெறும்போது, ஓங்கும்; அறும்போது,          நீங்கும் தீநட்பு எதற்கு?   உறுவது…