முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் அரவக்குறிச்சி, கிருட்டிணகிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களை மறு தேர்தல் என்றோ இடைத்தேர்தல் என்றோ குறிப்பிடுகின்றனர். இரண்டு பொதுத்தேர்தலிடையே நடை பெறும் தேர்தல் இடைத்தேர்தல் என்ற வகையில் இது சரிபோல்தான் தோன்றும். தேர்தல் நடைபெற்று – அஃதாவது வாக்குப்பதிவு முடிந்தபின்னர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் அல்லது தொகுதியில் நடைபெறும் தேர்தல்தான் மறு தேர்தல். தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் மறைவால் நடைபெறும் தேர்தலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் ச.ம.உ. விலகியதால் ஏற்படும் தேர்தலும் இடைத்தேர்தல்கள். அரவக்குறிச்சி,…
தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – மரு.இராமதாசு
தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – மரு.இராமதாசு இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பழைய வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 19 அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியதாகவும், இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர்…