பொதுத் தேர்வும் (நீட்/NEET)இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்
பொதுத் தேர்வும் (நீட்/NEET) இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா ‘நீட் (NEET)’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது சிறு வயதிலேயே தாயை இழந்தார் மாணவி அனிதா. இப்பேரிழப்பு தந்த வலியால், தான் மருத்துவராகி தனது சிற்றூர் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற உயரிய குறிக்கோளுடன் தன்…
அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் ! தனது கல்வி உரிமைக்காகப் போராடி சாவடைந்து கொண்ட தமிழக மாணவி அனித்தாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அவரது பெயரில் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையின் முழுவிவரம் : தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனித்தா சண்முகம் தன்னைத்தானே அழித்துத் தனது உயிரை மாய்த்த நிகழ்வு, உலகத் தமிழ்…
அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்
அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …
அரியலூர்ப்புத்தகத்திருவிழா 2015
ஆடி 01 முதல் 10 / சூலை 17 முதல் 26 வரை படத்தில் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.
மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்
அரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது. கூப்பிடு தொலைவில் முந்திரிக் காடுகள் இருப்பதால் பள்ளிக் சிறுவர்கள் கூட இங்கே மது, சூது என வழிதவறிக் கிடப்பது வெகுஇயல்பான ஒன்று. தான் பிறந்த இந்த ஊரைத் திருத்துவதற்காக ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி. “சட்டம்(எம்.ஏ., பி.எல்.,) படித்த எனக்கு…