ஏழுதமிழர் விடுதலை – நூல் வெளியீடு – கருத்தரங்கம்!
“ஏழுதமிழர் விடுதலை – உச்சநீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்! தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலான ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு…
திருவள்ளுவர் நாட்குறிப்பேடு – 2016, வாங்கிப் பயனுறுக!
2016ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்குறிப்பேடு வாங்கிப் பயனுறுக! எமது பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், 2016ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்குறிப்பேடு (Dairy), சிறப்பாக ஆயத்தமாகியுள்ளது. ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் (மொத்தம் 400 பக்கங்கள்) ஒவ்வொரு தாளிலும் அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள் (ஆண்டுக் குறிப்புகளோடு) உலகறிந்த தலைவர்களின் பிறந்த நாள் – நினைவு நாள் குறிப்பு நாடுகள் விடுதலை பெற்ற குறிப்புகள் திருக்குறள், புறநாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள் எனப் பல்வேறு செய்திகளும், ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண், தலைவர்களின்…