அரும்பதவுரையாசிரியரால் அறிய வரும் செய்யுட்கள் எண்ணிறந்தன. அரும்பதவுரையாசிரியர் மேற்கோள் காட்டிய நூல்கள் மிகப்பல. இசைத்தமிழ், நாடகத் தமிழ் பற்றி இவர் காட்டும் மேற்கோள் செய்யுட்கள் எண்ணிறந்தன. இவை எந்த நூல்களில் உள்ளன என்று அறிய வழியே இல்லை. அகத்தியச் சொல்லதிகாரச் சூத்திரம், இசைத் தமிழ் பதினாறு படலத்துள் கரணவோத்து, செயிற்றியனார் என்பன பெயர் குறிப்பிட்டுச் சொல்கிறார்; நூல்கள் இல்லை… பெயர் தெரிந்தும் கிடைக்காத நூல்கள் ஆசிரிய மாலை, வளையாபதி. திருக்குறள் முதலான நூற்கருத்துகளை, நூற்பெயர் குறிப்பிடாமலே தம் உரைநடையில் எழுதிக் கொண்டு செல்வது இவர்…