(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல்  அதிகாரம் 025. அருள் உடைமை   தொடர்பே இல்லா உயிர்களிடத்தும், தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு.   அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்,      பூரியார் கண்ணும் உள.   அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்;        பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு.   நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான்      தேரினும், அஃதே துணை.      எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும்        அருளை, நல்வழியில் ஆளுக..   அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த…