சிங்களப் படையே வெளியேறு!
வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கிலுள்ள மாவட்டங்களின் இளைஞர்கள், இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நேற்று நகரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கலை மண்டபத்தில் தங்கியுள்ள படையினருக்கு எதிராக இன்று முற்பகல் 9 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தப் போராட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வழியாகக் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது. பேருந்தில் பயணித்த போராட்டக்காரர்கள் ஒவ்வோர் இடத்திலுமுள்ள படைமுகாம்களுக்கு முன்னாலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – வைகோ அறிக்கை
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று வைகோ அறிக்கை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப்பு வாதாடினார். இலக்சம்பெர்க்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள்…
நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும்
இப்பொழுது (ஏப்பிரல் 24, 2014) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும் எனும் நோக்கில், தேர்தல் களம் அமைந்துள்ள சூழலை, உண்மை நோக்கில் பார்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது. இந்திய ஒன்றியத்தில் வாழும் மொழிவழி இனங்கள், எவ்வகையிலும் ஆளுமையுரிமை அடைந்துவிடக் கூடாது என்பதில், ஆரியம் (பிராமணியம்) கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகிறது. தனது கரவான நோக்கம் நிறைவேற, ஆரியம் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் சிறப்பாக எடுத்து செயற்பட்டு வெற்றியடைகிறது. இந்திய ஒன்றியத்தின் மறைந்த தலைமை அமைச்சர் மதிப்புமிகு வி.பி.சிங்…
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக்கொண்டாட வேண்டும்
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து 10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு….