தமிழர் நாகரிகம் ஆரியர்க்கு முற்பட்டது! சுமேரியர் நாகரிகத்தினும் மிக உயர்ந்தது!

சிந்துவெளித் தமிழர் நாகரிகம் ஆரியர்க்கு முற்பட்டது; சுமேரியர் நாகரிகத்தினும் மிக உயர்ந்தது!   நல்ல திட்டங்கள் தீட்டி இங்குச் சிறந்த நல்வாழ்வு(சுகாதார) முறையில் நகரங்களை அமைத்தவர்கள் சிந்து மண்டில மக்களே ஆவார்கள்.   இத்தகைய திட்டம் கி.மு.2000 வரை “உர்’ என்னும் நகரில் தோன்றியதாகக் கூறல் இயலாது. அதே காலத்தில்தான் பாபிலோனியாவிலும் இத்திட்டம் தோன்றியது. எகிப்தில் உள்ள கஃகூன் என்னும் நகரில் பன்னிரண்டாம் அரசு பரம்பரையினர் ஆண்ட காலத்தேதான் இது போன்ற திட்டம் தோன்றியது. எனவே, மிக்க புகழ் படைத்த எகிப்தியரும் பாபிலோனியரும் சுமேரியரும்…