பொங்கல் விழா 2047 / 2016, கனடா

  தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல்  பிற்பகல் 02.00 வரை   கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள்,…

புலர்வு

மாசி 30, 2046 – ஃசுகார்பரோ வணக்கம்.   அறிவகம் – கனடாத் தமிழ்க் கல்லூரி இணைந்து நடத்தும் புலர்வு நிகழ்வை ஊடகத்தினூடாக மக்களுக்கு அறியத்தந்து நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.   கனடா மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க கடந்த பல ஆண்டுகளாக தம்மை ஒப்படைத்து அறிவகம், கனடாத் தமிழ் கல்லூரியில் பணியாற்றும் 200 இற்கு மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாக இந்த விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இரவு விருந்துடன் இந்த நிகழ்வு நடைபெறும்.   நன்றி. உருக்சன்…