மாணிக்கவாசகம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தேவகோட்டை:  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.    கண்காட்சிக்கு வந்தவர்களைப் பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.   தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கிக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.   அறிவியல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பெரியசாமி, தேவகோட்டை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கண்காட்சியில் பாய்ம அழுத்த விதி(பெர்னோலி கோட்பாடு), பகல் – இரவு…