(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும்.   அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்,       உள்அழிக்கல் ஆகா அரண்.   அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு.   சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ,       நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு.   அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும்.   எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்,       மெய்ப்பொருள் காண்ப(து),…