உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா
உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு! அறுவடை விழா தரும் அறுசுவை உண்டியும், அழகுத் துணியும், தூய ஆடையும் அவைதரும் அகமகிழ்வால் வளரும் அன்பும் அருளும் ஆர்வமும் இன்பமும் ஈகையும் உவகையும் ஊக்கமும் போற்றி வரவேற்கத்தக்கதே. பொன்னும் மணியும் கொழிக்கும் நன்னாட்டிலே பிறந்தோம். வாழ்வின் பயனை நுகர்ந்தோம் என்று களி கொள்ளத்தான் வேண்டும். எரிமலையும் சுடுமணலும், நெடுங்காடும் பெருவெள்ளமும், வறண்ட நிலமும் வளமற்ற நீர்நிலையமும் படைத்த இடமாக இன்றி, நஞ்சையும் புஞ்சையும் நடு நடுவே நறுமணப் பூங்காவும் பழமுதிர்ச் சோலையும் பாங்குடன் விளங்கும் குன்றும், மலையும்…