ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள், காமத்துப்பால் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் (நாணத்தை விட வேண்டிய நிலைமை கூறல்) 51. காதல் நிறைவேறாதவர்க்கு மடலேறுதலே வலிமை.(1131) 52. நாணத்தை நீக்கி உடலும் உயிரும் மடல் குதிரை ஏறும்.(1132) 53. நாணமும் ஆண்மையும் இருந்தது. மடல்குதிரை இருக்கிறது. (1133) 54. நாணமும் ஆண்மையும் ஆகிய தெப்பங்கள் காதல் வெள்ளத்தில் இழுக்கப்படுகின்றனவே! (1134) 55. மாலைத்துன்பத்தையும் மடலேறுதலையும் தந்தாள். (1135) 56. கண்கள் உறங்கா. நள்ளிரவிலும் மடலேறுதலையே நினைப்பேன். (1136) 57. கடல்போல் காமம் பெருகினும்…
திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 14. களவு இயல் அலர் அறிவுறுத்தல் தலைமக்களின் காதலை, ஊரார்அறிந்து பலவாறு பழிதூற்றல் (01-05 தலைவன் சொல்லியவை) அலர்எழ, ஆர்உயிர் நிற்கும், அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால். “பழிச்சொல்லால், உயிரும் நிற்கிறது; இதனை, ஊரார் அறியார்”. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா(து), அலர்எமக்(கு) ஈந்த(து)இவ் ஊர். “குவளைமலர்க் கண்ணாள் அருமை அறியாது, பழிதூற்றுவார் ஊரார்”. உறாஅதோ ஊர்அறிந்த…