இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! “மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே எச்சரித்துள்ளார். இன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன்? வஞ்சகமாய் வெல்வதுதான் ஆரியத்தின் வழக்கம். அதுபோல்தான் இந்தியும் பொய்யான தகவல்கள் மூலமும் முறையற்ற செயல்கள் மூலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக மாறியுள்ளது….
இந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது! – வைகோ
இலக்கண இலக்கிய வளமே இல்லாத இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது! – வைகோ அறிக்கை பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும். உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி…