உருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்
உருசிய நாட்டிலுள்ள தமிழறிஞர்கள் சிலர் தமிழாய்வு தொடர்பான சில திட்டப் பணிகள் தொடர்பாகத் தமிழகம் வந்துள்ளனர். மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் உருசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி (Prof Alexander Dubyanskiy)அவர்களின் தலைமையில் வருகை தரும் இவர்களுடன் சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்கும் ஆசியவியல் நிறுவனம், தை 10, 2049செவ்வாய்க் கிழமை 23-01-2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு (செம்மஞ்சேரியில் அமைந்துள்ள) ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…