(பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அல்லியின் வரலாறு      `வளர்பெரு நிதியோய்! வாழ்கநீ பெரும! தளர்வுறும் நின்மனம் தகாநெறி ஒரீஇ நல்வழிப் படர்க! நானிவண் உற்றது செல்வக் கோவே செப்புவென் கேண்மோ!        மகப்புனல் ஆட மயில்நகர் விடுத்துத் தகப்பன் தடையைப் பொருட்படுத் தேனாய் 45 வருமெனை மறித்து வஞ்சகஞ் செய்தனன்; வெருகன் தன்னுரை முழுதும் மெய்யென நம்பிய என்பால் நலம்நுகர்ந் ததற்பின்      வெம்பி அழிந்திட வீதியில் விடுத்துக் காணா தேகினன்; கலங்கஞர் எய்தி நாணி என்னூர்…