தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி) தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார் வாணிகம் கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய…
குறியேற்றத்தின் மூலம் தமிழுக்குக் கேடுசெய்வோருக்கு நாக.இளங்கோவன் கண்டனம்!
கணித்தமிழ் ஆர்வலரின் செவ்வி! தமிழார்வம் மிக்க கணிப்பொறியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாக.இளங்கோவன். கால்நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கணிணி வல்லுநராகப் பணியாற்றுபவர். 1995 முதல் தமிழ் இணையத்தில் கருத்து செலுத்தி வருபவர். 2009-ல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகள் நடைபெற்ற பொழுது பொங்கி எழுந்தவர்களுள் இவரும் ஒருவர். நடக்க இருந்த தமிழ்ச் சிதைப்பைக் கட்டுரை மூலமாக மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக் காப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு அதன் எதிர்ப்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒருங்குகுறியில் 2010 இல் நிகழ…